பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-03-08 18:37 GMT
துவரங்குறிச்சி, மார்ச்.9-
துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னர். இவரது மனைவி லாவண்யா (வயது 25). இந்த தம்பதிக்கு திருமணமாகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். திருப்பூரில் வசித்து வந்த இந்த தம்பதி கடந்த மாதம் 25-ந் தேதி வீரப்பூரில் மகளுக்கு காதணி விழா நடத்தினர். பின்னர் பொன்னர் மட்டும் மீண்டும் திருப்பூர் சென்றுவிட்டார். லாவண்யா அந்த குழந்தைகளுடன் கஞ்சநாயக்கன்பட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்