மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன காவலாளி பலி

மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன காவலாளி பலியானார்

Update: 2022-03-08 18:29 GMT
திருவலம்

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள மலைமேடு ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 56). இவர் வேலூர் மாவட்டம் சேர்க்காடு அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சேர்க்காடு அருகே சென்னை- சித்தூர் சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் கோவிந்தசாமி மீது மோதியது. படுகாயம் அடைந்த அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து திருவலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்