தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் மக்கள் குறை தொடர்பாக வெளிவந்துள்ள செய்தி வருமாறு:-
மதுபான கூடமாக மாறிய பஸ் நிறுத்தம்
மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் பஸ் நிறுத்தம் குப்பைகள் தேங்கி மிகவும் வருத்தமாக உள்ளது. மது பிரியர்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டில்கள் பிளாஸ்டிக் கப்புகளை போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் பஸ் நிறுத்தத்தில் நிற்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாண்டூர் பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.