மீனவ குடும்பத்தினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து இருப்பதாக கூறி மீனவ குடும்பத்தினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Update: 2022-03-08 18:21 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்த பார்த்திபன், சிவதாஸ், சந்திரன், சுகுந்தன், பிரபாகரன் உள்பட 9 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பூம்புகார் மீனவர் கிராமத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் பூம்புகார் போலீசில் புகார் செய்திருந்தனர். இந்தநிலையில் எங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறிவருகிறார்கள். எனவே இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்