நாமக்கல்லில் 22 பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்

நாமக்கல்லில் 22 பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன.

Update: 2022-03-08 18:19 GMT
நாமக்கல்:
நாமக்கல் பஸ்நிலையத்தில் நேற்று மாலை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி, சரவணன், ராஜசேகர் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையத்திற்கு வந்த 42 அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதில் 22 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அகற்றினர். அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தகூடாது என டிரைவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்