சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி மையம்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-08 18:14 GMT
வேலூர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 7-ந் தேதி கடைசி நாளாகும். மேலும் வருகிற ஜூன் மாதம் இதற்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. எனவே இணையவழி மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு உதவி செய்வதற்காக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் தரை தளத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையம் செயல்படும். 

மேலும் தகவல்களுக்கு 0416-2253837 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்