இலுப்பூரில் புதிய வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்பு
புதிய வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பேற்றார்.
அன்னவாசல்:
இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த தண்டாயுதபாணி விடுவிக்கப்பட்டதையடுத்து திருநெல்வேலி மாவட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்த குழந்தைசாமி இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியரை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்மணி, தாசில்தார் முத்துக்கருப்பன் உள்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் வரவேற்றனர்.