சூளகிரி அருகே மனைவிக்கு கத்திக்குத்து தொழிலாளி கைது

சூளகிரி அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-08 17:32 GMT
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெரிய குத்திபாலா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனிரத்தினம்மா (30). கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், மனைவியின் கை விரல்களை கத்தியால் குத்தி காயப்படுத்தினார். இது குறித்து முனிரத்தினம்மா சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்