தர்மபுரி பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண் கைது
தர்மபுரி பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:
ஓசூரை சேர்ந்தவர் சந்திரா (வயது 68). இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் தர்மபுரிக்கு வந்தார். தர்மபுரி புறநகர் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அவருடைய கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையை அருகே நின்ற ஒரு பெண் பறித்துக்கொண்டு ஓட முயன்றார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த பெண்ணை பிடித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் ஈசல்பட்டியை சேர்ந்த சிவகுமார் மனைவி மகேஸ்வரி (40) என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.