கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வன்கொடுமை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

Update: 2022-03-08 16:49 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைசார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு காலாண்டில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்குகள் குறித்தும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும். 

அதன்படி இந்தாண்டு முதல் காலாண்டிற்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விரைந்து நடவடிக்கை

இதற்கு கலெக்டர்  ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்  முதல் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை வழக்குகள் குறித்தும் அந்த வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நவடடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், அந்த வழக்குகள்  மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் வருங்காலங்களில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் போலீசாருக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில்,  வேளாண்மை துணை இயக்குனர் விஜயராகவன், கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி முதல்வர் மோகன்தாஸ், அலுவலர் சாரா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த உறுப்பினர்கள் பழனிசாமி,

 கோவிந்தன், விஜய்               மனோஜ், அலுவலர் சாரா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேராதா உறுப்பினர்கள் அன்புமணிமாறன், சுரேஷ், ஆறுமுகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு அரசு சிறப்பு வக்கீல் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்