கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது

Update: 2022-03-08 16:35 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தோணியம்மாள் வரவேற்றார். 

விழாவில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் ஒன்றியகுழு தலைவர், பெண் கவுன்சிலர்கள் என்று அனைவரும் ஒரே சீருடை அணிந்து வந்திருந்தனர். ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் கேக் வெட்டினார்.

இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, தேவி, ஆறுமுகம், ராஜா மற்றும் அலுவலக பணியாளர்கள் செந்தாமரை, மகேஸ்வரி, வள்ளி அபர்ணா உள்பட அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வடக்கனந்தல் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.  பேரூராட்சி துணை தலைவர் தண்டபாணி, கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். கல்லூரி மற்றும் இந்திய மருத்துவ கழக மாணவர்கள் கலந்து கொண்டு மகளிர் நலன்,உரிமைகள், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் பேராசிரியர் செந்தில்,  பேரூராட்சி கவுன்சிலர்கள் அஞ்சுகம் தசரதன், மகேந்திரன், சத்தியா, முகேஷ், இலக்கியா குணசேகரன். மம்முபாலு, பழனி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் லட்சுமணன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்