போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம், நீர் மோர் வினியோகம் போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்
போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம், நீர் மோர் வினியோகம் போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்
கோவை
கோவை மாநகரில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு நீர் மோர், பழச்சாறு, குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னல் அருகே நடைபெற்றது.
அப்போது போலீசாருக்கு நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கி மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.
இதில் துணை கமிஷனர்கள் உமா, செந்தில்குமார் மற்றும் போக்குவரத்து உதவி கமிஷனர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.