மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் பலி

புளியங்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-07 22:18 GMT
புளியங்குடி, மார்ச்.8-
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள சொக்கநாதன்புதூரை சேர்ந்த தங்கையா என்பவரது மகன் மூக்காண்டி (வயது 30). கொத்தனாராக வேலை பார்த்து வந்தாார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் கடையநல்லூரில் வேலையை முடித்து விட்டு தனது நண்பர் அருணாசலத்துடன் மோட்டார் சைக்கிளில் சொக்கநாதன்புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். புளியங்குடியை அடுத்துள்ள நவ்வா சாலை பகுதியில் சென்றபோது வாசுதேவநல்லூரில் இருந்து அபு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மூக்காண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூக்காண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்