மேச்சேரி அருகே ஆசிரியையை இடமாற்றக்கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

மேச்சேரி அருகே அரசு பள்ளி ஆசிரியையை இடமாற்றக்கோரி பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-03-07 21:53 GMT
மேச்சேரி:
மேச்சேரி அருகே அரசு பள்ளி ஆசிரியையை இடமாற்றக்கோரி பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அரசு பள்ளி
மேச்சேரி அருகே மல்லிகுந்தம் ஊராட்சி பள்ளக்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இதனிடையே பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை ஆசிரியை ஒருவர் அடிப்பதாகவும், இதுகுறித்து மாணவ-மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக பள்ளி ஆசிரியையை வேறு பள்ளிக்கு இடமாற்றக்கோரி சம்பந்தப்பட்ட துறையினரிடம் பெற்றோர் மனுகொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாணவ-மாணவிகளை அடிக்கும் ஆசிரியையை இடமாற்றக்கோரி, பெற்றோர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தை
மேலும் அவர்கள் கூறும் போது, சம்பந்தப்பட்ட ஆசிரியையை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் எங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் படித்து வைத்துக்கொள்கிறோம். எனவே மாற்று சான்றிதழ் தர வேண்டும் என்று கூறினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேச்சேரி போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உயர் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியையை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் நேற்று காலை 2 மணி நேரம் பரபரப்புநிலவியது.

மேலும் செய்திகள்