கார் மோதி கொத்தனார் பலி

கார் மோதி கொத்தனார் பலியானார்.

Update: 2022-03-07 21:39 GMT
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே சேசஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் மஞ்சப்பன். இவருடைய மகன் ஆனந்த் (வயது 20), கொத்தனார். நேற்று காலை சேசஞ்சாவடி கால்நடை மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஆனந்த், நடந்து கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஆனந்த் மீது, மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது மோதி நிற்காமல் சென்ற காரை தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்