பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற வெளிநாட்டு வாலிபர் கைது

பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற வெளிநாட்டு வாலிபர் கைது செயயப்பட்டுள்ளார்.

Update: 2022-03-07 21:15 GMT
பெங்களூரு:

பெங்களூரு சித்தாபுரா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, ஜெயநகர் 1-வது பிளாக், பைரசந்திரா பகுதியில் சந்தேகப்படும் படியாக ஸ்கூட்டரில் சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த ஸ்கூட்டரில் சோதனை நடத்திய போது போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போதைப்பொருளை விற்பனை செய்ய அவர் காத்து நின்றதும் தெரிந்தது. இதையடுத்து, அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்த டேனியல் ஜா (வயது 31) என்று தெரிந்தது. வியாபாரம் தொடர்பான விசாவில் டேனியல் இந்தியாவுக்கு வந்திருந்தார்.

  பின்னர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அவர், பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு பானசாவடியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான டேனியல் மீது சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாாித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்