ஊராட்சிகளில் உள்ள நூலகங்கள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

ஊராட்சிகளில் உள்ள நூலகங்கள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

Update: 2022-03-07 20:41 GMT
திருப்பத்தூர், 

ஊராட்சிகளில் உள்ள நூலகங்கள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

அடிக்கல் நாட்டு விழா

திருப்பத்தூர் அருகே உள்ள கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டரமாணிக்கம் ஊராட்சியில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் ரூ.74.50 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். மேலும் வடக்குத்தெரு, அமிர்தபுரம், பாரதியார்தெரு, தெற்குபட்டு, தண்டாயுதபாணி தொடக்கப்பள்ளி, கலங்கரை வீதி, பொதுமயானம் ஆகிய இடங்களில் ரூ.10.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிணறுகள்,  மின்விசைப் பம்புகளை இயக்கி அவர் தொடங்கி வைத்தார். பின்னர் ரூ.2.13 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்டுள்ள 21 கண்காணிப்பு கேமராக்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். 

நடவடிக்கை

பின்னர் அவர் பேசும்போது, கிராமப்புறங்களில் இருக்கும் நூலகங்களுக்கு அரசின் சார்பில் புத்துணர்வு அளிக்கப்பட்டு  சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக விழாவுக்கு மாவட்ட கலெக்டர் 
மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.் சிதம்பரம் செட்டியார் வரவேற்றார். 
சிறப்பு விருந்தினர்களாக ராஜமாணிக்கம் ராஜரத்தினம் டாக்டர் சேதுகுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், கல்லல் ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராமு, கிளைச் செயலாளர் ராமன், மணிகண்டன், கனகு கருப்பையா, பாண்டி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சரவணன் இளைஞரணி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்