கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேருக்கு சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேருக்கு சிகிச்சை

Update: 2022-03-07 20:17 GMT
திருச்சி, மார்ச்.8-
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10-க்கும் கீழ் சரிந்துள்ளது. இந்தநிலையில் நேற்று 3 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 14 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினர். திருச்சியில் தற்போது வரை 70 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்து 915 ஆகவும், இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 161 ஆகவும் உள்ளது.

மேலும் செய்திகள்