மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

Update: 2022-03-07 20:16 GMT
கமுதி
கமுதி அருகே காணிக்கூர் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இக்கிராமத்தில் உள்ள பாதாள காளியம்மன் கோவில் மாசித் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மாட்டுவண்டி பந்தயம் பெரியமாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. கமுதி-சாயல்குடி சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாடுகளுக்கு 10 கிலோமீட்டர் தொலைவிலும், சின்ன மாடுகளுக்கு 7 கிலோமீட்டர் தொலைவிலும் நிர்ணயிக்கப்பட்டது, தென் மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்ைல, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 36 மாட்டு வண்டிகள் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். கமுதி பெருநாழி, சாயல்குடி, மற்றும் கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை ஓரம் நின்று பந்தயத்தை பார்வையிட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்