பத்திரப்பதிவு செய்த திருச்சுழி சார்-பதிவாளர் பணியிடை நீக்கம்
பதிவுத்துறை தலைவர் உத்தரவுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்த திருச்சுழி சார்-பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விருதுநகர்,
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவில்லை என்ற காரணத்தினால் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவு துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சார்-பதிவாளர் சரோஜா கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தினை கிரைய பத்திரம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பத்திரப்பதிவுத்துறை தலைவரின் உத்தரவுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்ததாக சரோஜாவை பணியிடை நீக்கம் செய்து மதுரை பத்திரப்பதிவுத்துறை துணைத்தலைவர் ஜெகதீசன் உத்தரவிட்டுள்ளார்.