விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-03-07 19:43 GMT
திருச்சி, மார்ச்.8-
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் ஊரணிகளில் மண்டிக்கிடக்கும் காட்டாமணக்கு செடிகள், ஆகாயத்தாமரை, கருவேல மரங்களை அகற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வலியுறுத்தியும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்க மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமையிலான விவசாயிகள் சிலர், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான வாயில் முன்பு நேற்று கருவேல மரக்கிளைகளை ஒடித்துக் கொண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது அவ்வழியாக சென்ற அமைச்சர் கே.என்.நேரு, விவசாயிகளிடம் ஆர்ப்பாட்டத்துக்கான காரணத்தை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்