திருப்பத்தூரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
திருப்பத்தூரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் டவுன் கச்சேரி தெருவில் வசிப்பவர் ஜானகிராமன் (வயது 84), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 78). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர் இவர்களது இளைய மகன் பார்த்திபன், பெங்களூருவில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார். இவர் ஓசூரில் இருந்து தினமும் பணிக்கு சென்று வருகிறார்.
இவரது வீட்டிற்கு ஜானகிராமன் கடந்த 26-ந்் தேதி மனைவியுடன் சென்றிருந்தார். நேற்று இவர்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தனர் உடனடியாக ஓசூரில் இருந்த ஜானகிராமனுக்கு தெரிவித்தனர்.அவரும் குடும்பத்தினரும் பதறியடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தபோது மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் சென்றபோது அறை கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி சாமான்கள் மற்றும் ரூ.4 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.
இதுகுறித்து ஜானகிராமன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர், திருப்பத்தூர் முக்கிய சாலையாக விளங்கக்கூடிய கச்சேரி தெரு, அருகில் இந்தியன் வங்கி பணம் பாதுகாப்பு அறை உள்ளது. இங்கு 24, மணி நேர போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி.கேமராவையும் மர்ம நபர்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் இருக்க அதனை வேறு பகுதியில் திருப்பி வைத்து விட்டு கைவரிசை காட்டியுள்ளனர். தடயங்களை சேகரித்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.