தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி. பொதுமக்கள் குறைகள் பகுதி
சாலை ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா ஆதமங்கலம் புதூர், கெங்கவரம் செல்லும் சாலையின் இரு புறமும் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஐயப்பன்நகர், நவாப்பாளையம், கெங்கவரம், பெருமாபாளையம், தாதப்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேளாண் பொருட்களை ஏற்றி செல்லும் விவசாயிகள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே சாலை ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்ற வேண்டும். |
-நவாப் ஆர்.முருகன்.
பழுதான சாலை
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பொத்தரை ஊராட்சியில் உள்ள பிரதான சாலையாகும். இந்தச் சாலை புதுப்பித்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தச் சாலை மிகவும் மோசமாக நிலையில் பழுதடைந்துள்ளது. சாலையை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? |
-சரண்குமார், பொத்தரை.