திருப்பெருந்துறையில் வாரச்சந்தை தொடக்கம்
திருப்பெருந்துறையில் வாரச்சந்தை தொடங்கியது.
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் திருப்பெருந்துறை ஊராட்சி சார்பில் வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வடக்களூரில் இயங்கி வந்த வாரச்சந்தை போதிய இட வசதி இல்லாத காரணத்தால் சந்தை செயல்படாமல் இருந்தது. இதையடுத்து முதலில் இயங்கிய புதிய பஸ் நிலையத்தின் அருகில் போதுமான இடவசதியுடன் நேற்று (திங்கட்கிழமை) முதல் வாரச்சந்தை தொடங்கியது. இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் வாரச்சந்தை இயங்கும். சந்தையில் ஏராளமான காய்கறிகடைகளும், மீன்கடைகளும் உள்ளது.