மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.14 லட்சம் உண்டியல் வசூல்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.14 லட்சம் உண்டியல் வசூலாகி உள்ளது.

Update: 2022-03-07 18:07 GMT
மணவாளக்குறிச்சி, 
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.14 லட்சம் உண்டியல் வசூலாகி உள்ளது.
உண்டியல் வசூல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்ச்சை கடன் செலுத்துவதற்காக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 3-ந் தேதி முதல் நேற்று வரை வைக்கப்பட்டிருந்த நிரந்தர உண்டியல் ஒன்று மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வைக்கப்பட்டிருந்த திறந்த வார்ப்பு ஆகியவை நேற்று திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர்கள் கோபாலன், செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் ஆறுமுகநயினார், மராமத்து பொறியாளர் அய்யப்பன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர். உண்டியல் பணம் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.13 லட்சத்து 90 ஆயிரத்து 298 ரொக்கம், 4.200 கிராம் தங்கம், 90 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் வருமானமாக கிடைத்தது. 

மேலும் செய்திகள்