மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விராலிமலை:
விராலிமலையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் வணிகவரித்துறை உதவி ஆணையர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இதில் விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட 100 குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை சென்னை உதவும் உள்ளங்கள் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் வழங்கப்பட்டது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மலையரசன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் பவுன்துரை வரவேற்றார். முடிவில் சமூக ஆர்வலர் முரளி நன்றி கூறினார்.