விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-03-07 17:54 GMT
கரூர்
நொய்யல்
நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி ஆலயத்தில் மாசிமாத சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வருண கணபதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  இதேபோல் சேமங்கி, மரவாபாளையம், குறுக்குச்சாலை, அண்ணாநகர், கரைப்பாளையம், தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மேலும் செய்திகள்