கம்பைநல்லூர் பேரூராட்சியில் தலைவர் துணைத்தலைவர் பதவி ஏற்பு
கம்பைநல்லூர் பேரூராட்சியில் தலைவர் துணைத்தலைவர் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
மொரப்பூர்:
தா்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவராக வடமலை முருகன், துணைத்தலைவராக மதியழகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு நேற்று கம்பைநல்லூர் பேரூராட்சி வளாகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மொரப்பூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி செங்கண்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செங்கண்ணன், துரை பெரியசாமி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராணி பலராமன், பா.ம.க. நகர செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி உதவியாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். தொடர்ந்து பேரூராட்சி தலைவராக வடமலை முருகன், துணைத்தலைவராக மதியழகன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி ரத்தினவேல், ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சரவணன், ஈஸ்வரன், பா.ம.க. நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் கோவிந்தசாமி, சீனிவாசன், மாணவரணி மாநில துணை செயலாளர் செந்தில்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் குமரவேல், செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சேட்டு சக்தி, வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.