கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

ஆயில்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

Update: 2022-03-07 17:49 GMT
நாமகிரிப்பேட்டை:
சேலம் மாவட்டம் தலைவாசல் இலுப்பநத்தம் மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 20). இவர் நாமக்கல் மாவட்டம் கார்கூடல்பட்டி ஊராட்சி ஒம்பதாம்பாளிகாடு பகுதியில் நடந்த திருமண விழாவில், சப்ளேயர் வேலைக்காக வந்தார். பின்னர் வேலை முடிந்து அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த கிணறு ஒன்றில் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் தவறி விழுந்த மாரிமுத்துவை தேடினர். பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்