மகா மாரியம்மன் கோவில் மாசி திருவிழா

மகா மாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடந்தது.

Update: 2022-03-07 17:47 GMT
கரூர்
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் பண்டு தகாரன்புதூர் பெரியார் நகரில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறு வழக்கம். அதேபோல் இந்தாண்டும் மாசி திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக மகா மாரியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மேலும் கோவிலில் உள்ள விநாயகர், கருப்பண்ண சாமி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவிலுக்கு கரகம் பாலித்து எடுத்து வரப்பட்டது.
2-ம் நாள் நிகழ்ச்சியாக காலை 8 மணி அளவில் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீசட்டி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 3-ம் நாள் நிகழ்ச்சியாக காலை 10 மணி அளவில் கருப்பண்ண சுவாமிக்கு கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. மாலை மகா மாரியம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்