தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான செய்திகள் வருமாறு:-

Update: 2022-03-07 17:24 GMT
சாய்ந்த நிலையில் மின் கம்பம்

திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமம் தோப்புத்தெரு அருகே விவசாய நிலத்தில் மின் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின் கம்பத்தில் உள்ள வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. மேலும் மின் கம்பம் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் விவசாய நிலத்திற்கு சென்று விவசாயிகள் தண்ணீர் விட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                                                                                                      -விவசாயிகள், அரசவனங்காடு.

தடுப்புச்சுவர் வேண்டும்

நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் அருகே நந்திநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வடக்கு பகுதியில் காளியம்மன் கோவிலுக்கு அருகே குளம் உள்ளது. இந்த குளக்கரையில் தடுப்புச்சுவர் இல்லாததால் பொதுமக்கள் பெரியதும் சிரமப்படுகின்றனர். குழந்தைகள், முதியவர்கள் குளத்தில் தவறி விழும் வாய்ப்பு இருப்பதால் குளத்தை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி குளத்தை சுத்தப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                                                                                                            -முத்தையன், வடக்குபொய்கை நல்லூர்.

மேலும் செய்திகள்