நண்பர் வீட்டில் அடைத்து வைத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

நண்பர் வீட்டில் அடைத்து வைத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2022-03-07 17:06 GMT
வானூர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கீழ்புத்துபட்டு கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண் ஒருவர், 11-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை காணவில்லை என்று கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.  அதன்பேரில் காணாமல் போன மாணவி குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த மாணவி, திண்டிவனம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அகதிகள் முகாமை சேர்ந்த தினேஸ்வரன்(வயது 22) என்பவர் தன்னை கடத்திச்சென்று, நண்பர் வீட்டில் தங்கவைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்