பவுஞ்சிபட்டில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு

பவுஞ்சிபட்டில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தாா்.

Update: 2022-03-07 16:27 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் பவுஞ்சிபட்டு கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு  திட்டத்தின் கீழ் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. 

இந்த பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் மணி  நேரில் ஆய்வு செய்தார்.   அப்போது,  பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும்  வீடுகளையும் அவர் பார்வையிட்டார். 


 ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் சித்ரா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோமதி , ஊராட்சி மன்ற தலைவர் பாகருன்னி சாஹாசீம், ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்