சட்டசபையில் பா.ஜனதா அமளி

மின் இணைப்பு துண்டிப்பால் வாலிபர் தற்கொலை விவகாரத்தில் சட்டசபையில் பா.ஜனதாவினர் அமளியில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-07 14:13 GMT
கோப்பு படம்
மும்பை,

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூர் தாலுகாவில் கடந்த சில நாட்களுக்கு முன் சூரஜ் ஜாதவ் (வயது26) என்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கட்டணம் செலுத்தாத அவரது இடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தான் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

 இந்த விவகாரத்தை நேற்று மராட்டிய மேல்-சபையில் பா.ஜனதாவினர்  எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தாரேக்கர் பேசுகையில், " மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட விரக்தியில் ஜாதவ் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதுகுறித்து அவர் பேஸ்புக் லைவில் பேசியுள்ளார் " என்றார். 

 இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.சி. சதாபாவ் கோட் வலியுறுத்தினார். 
பா.ஜனதாவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மேல்-சபை தலைவர் ராம்ராஜி நிம்பல்கர் அவையை நாள் முழுக்க ஒத்தி வைத்தார்.


மேலும் செய்திகள்