தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-06 21:31 GMT
கருப்பூர்:
சேலம் கருப்பூரை அடுத்த தே.கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 32). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்றும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் மகேஸ்வரி திடீரென வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்