27 பவுன் நகையுடன் வடமாநில வாலிபர் தலைமறைவு
மதுரையில் நகைப்பட்டறையில் வேலை பார்த்த வடமாநில வாலிபர் 27 பவுன் நகையுடன் தலைமறைவாகி விட்டார்.
மதுரை,
மதுரை வடக்குபெருமாள் மேஸ்திரிவீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவர் பங்கஜம் காலனியில் நகை பட்டறை வைத்துள்ளார். இவரது கடையில் மேற்குவங்கத்தை சேர்ந்த நஸ்ருல்ஹக்பைலால்ன் (வயது 32) என்பவர் வேலை பார்த்து வந்தார். திடீரென்று அவரை காணவில்லை. மேலும் கடையில் இருந்த 27 பவுன் நகையும் திருடு போய் இருந்தது. எனவே அவர் தான் நகையை திருடிவிட்டு மாயமாகி விட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில வாலிபரை தேடி வருகிறார்கள்.