குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக மனு அளிக்கலாம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக மனு அளிக்கலாம்.
பெரம்பலூர்:
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல், பொதுமக்கள் மனுக்களை செலுத்துவதற்காக பெட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் அரசு உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று முதல் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அரசு வழிகாட்டுதலின்படி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை நேரடியாக அளிக்கலாம்.