தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-06 18:19 GMT
திருச்சி
குண்டும், குழியுமான சாலை
திருச்சி கண்டோன்மெண்ட்  காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும், அந்த சாலையின் குறிப்பிட்ட இடத்தில் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவேக், திருச்சி.

நாய்கள் தொல்லை
திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பஸ் பகுதியில் பகல், இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் பயணிகளை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.

கழிவுநீரால் துர்நாற்றம் 
திருச்சி பீமன்நகர் மார்சிங்பேட்டையில் உள்ள துர்கை அம்மன் கோவில் வலது புறம் பாதாள சாக்கடை உள்ளது. இதில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.

ரெயில்வே பாலத்தின் அடியில் தேங்கி நிற்கும் தண்ணீர்
திருச்சி மாநகர் கெம்ஸ்டவுன் பகுதியையும், மேலப்புதூர் பகுதியையும் இணைக்கும் ரெயில்வே பாலத்தின் அடியில் எப்பொழுதுமே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. இந்த வழியாக பள்ளிக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில்வே பாலத்தின் அடியில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபேல் குணசீலன், திருச்சி.

மேலும் செய்திகள்