பென்சனர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
அகில பாரத மூத்தகுடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
விழுப்புரம்,
அகில பாரத மூத்தகுடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்டதலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சக்திவேல் வரவேற்றார். செயலாளர் ராசமுத்து, பொருளாளர் தங்கவீரமணி, மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட தணிக்கைகுழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட முன்னாள் செயலாளர் சுருளிமலை, மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, மாநில துணைத்தலைவர் ராமு சிதம்பரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.