பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஒற்றுமை அணி வகுப்புக்கு தடை விதித்ததை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
சேலம் மற்றும் தாம்பரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஒற்றுமை அணிவகுப்பை நடத்த தடை விதித்த போலீசார், அணிவகுப்பில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இதனைக் கண்டித்தும், அனுமதி வழங்க மறுத்த தமிழக அரசை கண்டித்தும் மயிலாடுதுறையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சபீக் அகமது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகமது பைசல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சலீம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் ரவூப், மாவட்ட தலைவர் பைசல் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.