சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

Update: 2022-03-06 17:35 GMT

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் அருகே செம்பராம்பட்டு கிராமத்தை  சேர்ந்தவர் துக்காப்பிள்ளை மகன் இளையராஜா(வயது 45). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வரும் இவர் நேற்று மாலை பரமநத்தம் கிராமத்தில் இருந்து மூரார்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்