நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 67,402 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 67,402 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்

Update: 2022-03-06 17:24 GMT
நாமக்கல், மார்ச்.7-
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 67 ஆயிரத்து 986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 988 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்த மாவட்டத்தில் 12 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 67 ஆயிரத்து 402 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 52 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்