குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கொள்ளிடம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கூட்டு குடிநீர் குழாய்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒருவார காலம் ஆகிறது.
கடந்த ஒரு வார காலமாக உடைந்த குழாய் பகுதியில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக தெற்குராஜன் வாய்க்காலில் கலக்கிறது.
சீரமைக்க வேண்டும்
எனவே எந்த பயனும் இன்றி வீணாக வெளியேறிக் கொண்டிருக்கும் குடிநீரை அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் வகையில் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.