சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்
தலைஞாயிறில் சத்துணவு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது.
வாய்மேடு:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட இணைச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் கனிமொழி வரவேற்றார். கடந்த ஆண்டு நடந்த பணிகள் குறித்து ஒன்றியத் தலைவர் ரம்யா பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தணிக்கையாளரும், வேதாரண்யம் ஒன்றிய தலைவருமான வீ.எஸ் ராமமூர்த்தி புதிய நிர்வாகிகளைஅறிமுகம் செய்து பேசினார். முடிவில் ஒன்றிய பொருளாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.