கடலூரில் சாரல் மழை

கடலூரில் சாரல் மழை பெய்தது.

Update: 2022-03-06 16:48 GMT

கடலூர், 

தெற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து புதுச்சேரிக்கு சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

இது தென் மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து விட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.


அதன்படி கடலூரில் இன்று காலை லேசான மழை பெய்தது. அதன் பிறகு மழை இல்லை. இருப்பினும் அவ்வப் போது வானம் மேக மூட்டமாக இருந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு பிறகு சாரல் மழையாக பெய்ய ஆரம்பித்தது. 

இந்த மழை விட்டு விட்டு பெய்த வண்ணம் இருந்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் இந்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

இதேபோல் கடலூரில் கடல், சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கடற்கரையோரங்களிலும், துறைமுக பகுதியிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

மேலும் செய்திகள்