தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கடலூர் மண்டல பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கடலூர் மண்டல பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

Update: 2022-03-06 16:39 GMT

கடலூர், 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலூர் மண்டலம், கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். 

நகர தலைவர் ஜி.ஆர். துரைராஜ், நகர துணை தலைவர் பட்டேல், நகர பொருளாளர்  தேவிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சீனுவாசன் வரவேற்றார்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது திருச்சியில் வருகிற மே 5-ந்தேதி 39-வது வணிகர் தின விடியல் மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் கடலூர் மண்டலத்தில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். முன்னதாக கடலூர் முதுநகரில் வணிகர் சங்க கொடியை விக்கிரமராஜா ஏற்றினார்.


கூட்டத்தில் புதுச்சேரி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சிவசங்கர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர், மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, ஓட்டல் ஆனந்த      பவன் குரூப்ஸ் உரிமையாளர் நாராயணன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

வாரிய தலைவர்

கூட்டத்தில் வணிகர் நல வாரியத்தை சிறப்புடன் நடத்தி வணிகர்களுக்கு பல திட்டங்களை அரசிடம் இருந்து பெற்றுத்தர மாநில தலைவர் விக்கிரமராஜாவை வாரிய தலைவராக அரசு அறிவிக்க வேண்டும். விக்கிரவாண்டி, தஞ்சாவூர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் சுமங்கலி சில்க்ஸ் நிஸ்டர் அலி, ஆனந்தபவன் ராம்கி நாராயணன், கடலூர் மாவட்ட வர்த்தக சங்க பொருளாளர் டி.ஆர்.எம். ராஜமாரியப்பன், மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் மணி, மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், நகர இணை செயலாளர்கள் செல்லபாண்டியன், வெங்கடேசன், பகுதி செயலாளர்கள் மாஸ்டர் பேக்கரி ராஜா, சன்பிரைட் பிரகாஷ், ரவிச்சந்திரன், தங்கராஜ், ஜல்லி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் வீரப்பன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்