மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2 தேர்வு பயிற்சிக்கு வந்தவர்கள் இடவசதியின்றி தவிப்பு மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுகிறது

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி பெற வருபவர்கள் போதிய இடவசதியின்றி தவிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

Update: 2022-03-06 16:36 GMT

கடலூர், 

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் குரூப்-2, 2 ஏ போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. திறமையான அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதால் தேர்வு எழுத இருப்பவர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. 

நேற்று 250 பேர் பயிற்சிக்கு வந்தனர். ஆனால் மைய நூலகத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், 50-க்கும் மேற்பட்டவர்கள்  நின்று கொண்டே படிக்கும் நிலை ஏற்பட்டது. 

மரத்தடியில் பயிற்சி

இந்நிலையில் .இன்று 300 மாணவ-மாணவிகள் வந்ததால், இடவசதியின்றி நூலக அலுவலக வளாக மரத்தடியில் சாமியானா பந்தல்  போட்டு, பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

முதல்நிலை நூலகர் பாப்பாத்தி, ஆர்.டி.எஸ். ராஜேந் திரன் ஆகியோர் முயற்சியால் 300 நாற்காலிகள் மற்றும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு,

 பிறகு பயிற்சி வகுப்பு நடந்தது. ஆகவே மாணவ-மாணவிகள் பயிற்சி பெற போதிய இடவசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்