திருத்தணி முருகன் கோவிலில் ராஜகோபுரத்துக்கு ரூ.50 லட்சத்தில் வாசற்கால் தூண்கள் நன்கொடை

திருத்தணி முருகன் கோவிலில் ராஜகோபுரத்துக்கு ரூ.50 லட்சத்தில் வாசற்கால் தூண்களை தனியார் நிறுவனம் நன்கொடை வழங்குவதாக தெரிவித்தது.

Update: 2022-03-06 15:53 GMT
முருகக்கடவுளின் அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக திருத்தணி முருகன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் கிழக்கு திசையில் கம்பீரமாக 122 அடி உயரத்துக்கு, ஒன்பது நிலை ராஜகோபுரம் உள்ளது. இந்த இராஜகோபுரத்தின் இருபுறமும் 30 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கருங்கற்கலால் ஆன வாசற்கால் தூண்களை திருத்தணி அடுத்த பீரகுப்பம் பகுதியில் இயங்கும் தனியார் நிறுவனம் நன்கொடை வழங்குவதாக தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரூ.50 லட்சம் மதிப்பிலான கருங்கல் வாசற்கால் தூண்களுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் எந்திரத்தின் உதவியுடன் ராட்ச லாரியில் வாசற்கால் தூண்கள் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் பூஜை செய்து வழிப்பட்டனர். பின்னர் கோவில் நிர்வாகத்திடம் வாசற்கால் தூண்களை ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்