பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

முகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-03-06 14:39 GMT
பழனி:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், வாரவிடுமுறை மற்றும் முகூர்த்த தினத்தையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கிரிவீதி, மலைக்கோவில், திருஆவினன்குடி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்களின் வருகையால் மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகள், வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆனது. பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
நேற்றும் காலை முதலே கடும் வெயில் நிலவியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள், முதியவர்கள், குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர். இதற்கிடையே கோவில் நிர்வாகம் சார்பில் வெளிப்பிரகாரத்தில் கயிறு விரிப்பு விரிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றப்பட்டது. மேலும் வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் அங்கு இளைப்பாறினர்.

மேலும் செய்திகள்