விபத்தில் கணவர் உயிரிழந்ததால் துக்கம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை
ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் கணவர் உயிரிழந்ததால் துக்கம் தாங்காமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் கணவர் உயிரிழந்ததால் மனமுடைந்த மனைவி துக்கம் தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மோட்டார் சைக்கிள் மீது...
திருச்சியைச் சேர்ந்த தங்கவேல் மகன் வீரமணி (வயது 37). இவர் லாரியில் சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு ஓட்டப்பிடாரம் வழியாக நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கொம்பாடி தளவாய்புரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே குலசேகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் (27) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆறுமுக பெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவு அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆறுமுகப் பெருமாள் உயிரிழந்தார். இதனால் கணவரின் பிரிவை தாங்க முடியாமல் ஆறுமுகப்பெருமாள் மனைவி பார்வதி (23) தவித்து வந்துள்ளார்.
மனைவி தற்கொலை
துக்கம் தாங்காமல் புலம்பி வந்த அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏட்டப்பிடாரம் போலீசார் அந்த வீட்டுக்கு ெசன்று பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஆறுமுகப் பெருமாளுக்கும் பார்வதிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. கணவர் விபத்தில் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கெலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.